இனிய கம்ம குல சொந்தங்களே ! கடந்த இரண்டு ஆண்டுகளாக KSK மேட்ரிமோனி நிறுவனம் மதிப்பிற்குரிய திரு கே நல்லையா நாயுடு அவர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. சுமார் 5000 - க்கும் மேற்பட்ட மணமகன் மணமகள் திருமண தகவல்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமது KSK மேட்ரிமோனி நிறுவனத்தின் மூலம் இதுவரை 350 திருமணங்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
நமது சமூகத்தின் இணைப்புப் பாலமாக செயல்பட்டு கொண்டிருக்கும் கம்மவார் சங்கமும் மாத இதழில் மணமகன், மணமகளின் பெயர், படிப்பு, உத்தியோகம், நட்சத்திரம், சம்பளம்,புகைப்படம் போன்ற முழு விவரங்கள் கம்ம சங்கமம் மாத இதழின் ஐந்தாயிரம் வாசகர்களுக்கும் உடனே சென்று சேரும் வகையில் பிரசுரிக்க வருடம் ரூபாய் 500 மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்படி ரூபாய் 500 செலுத்தி தங்களுக்கான தகவல்களை விரைவாக பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
லாப நோக்கம் எதுவும் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் KSK மேட்ரிமோனி திருமண தகவல் மையம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தனது கிளைகளை அமைத்து செயல்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருக்கிறது. தங்களுக்கு தேவையான திருமணம்
குறித்த தகவல்கள் தங்களுக்கு விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் கிடைக்க KSK மேட்ரிமோனி நிறுவனம் தனது சேவையை கம்ப்யூட்டர் மயமாக்கி உள்ளது.
தரகர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் போலி நபர்களின் தலையீட்டை தவிர்க்க நேரடியாக KSK மேட்ரிமோனி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.